உளுந்தூர்பேட்டை, டிசம்பர் 21:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி குட்பட்ட மீனாட்சிபுரம் பகுதியில் சமீபத்தில் நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு, உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் மனிதநேய அடிப்படையில் உதவிகள் வழங்கப்பட்டன.
இன்று நடைபெற்ற உதவி வழங்கும் நிகழ்ச்சியில், உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத் தலைவர் ரவி தலைமையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் ரூ.10,000 ரொக்க உதவியும், அத்தியாவசிய மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டன. மேலும், விபத்தால் மனஅழுத்தத்திலும் பொருளாதார சுமையிலும் உள்ள குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நிர்வாகிகள், சிறுமி விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்தினர்.
இந்த நிகழ்வில் ரோட்டரி சங்கத்தின் மூத்த நிர்வாகிகள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, சமூகப் பொறுப்புணர்வுடன் தொடர்ந்து இதுபோன்ற சேவைப் பணிகளில் ஈடுபடுவோம் என உறுதி தெரிவித்தனர்.

No comments:
Post a Comment